விரைவில் மும்பை பறக்கும் நயன்தாரா.. காரணம் இதுதான்!

Nayanthara Atlee ShahRukh Khan
By Parthiban.A Mar 25, 2022 07:30 PM GMT
Report

நடிகை நயன்தாரா தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக நடித்து இருக்கின்றனர்.

மும்பைக்கு பறக்கிறார்

நயன்தாரா ஏப்ரல் முதல் வாரத்தில் மும்பைக்கு பறக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் படத்தில் நடிப்பதற்காக தான் செல்கிறார்.

அறிவிக்கப்பட்டு நீண்ட காலமாக தாமதமாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக தற்போது தொடங்க இருப்பதாக தெரிகிறது. Film City Studiosல் தான் ஷூட்டிங் நடக்க இருப்பதாக பாலிவுட் இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இருப்பினும் இது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும் என்றும் கூறி உள்ளனர்.

விரைவில் மும்பை பறக்கும் நயன்தாரா.. காரணம் இதுதான்! | Nayanthara To Join Srk Atlee Film Shooting Mumbai

ஷாருக் கான்

ஷாருக் கான் தற்போது நடித்து வரும் Pathaan படத்தின் ஷூட்டிங் தற்போது ஸ்பெயினில் நடந்து வருகிறது. அங்கு ஷூட்டிங் 27ம் தேதியோடு முடிகிறது. அதற்கு பிறகு அட்லீ படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

பலருக்கும் இந்த போட்டோ பிடிக்காது.. பெரிய உண்மையை போட்டுடைத்த ராஷ்மிகா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US