ஷாருக்கானை நம்பி ஏமாந்துபோன நயன்தாரா.. எதனால் தெரியுமா
நயன் - ஜவான்
தென்னிந்திய சினிமாவில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த நயன்தாரா, தற்போது பாலிவுட் திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார். அதற்கு முக்கிய காரணமாக ஜவான் படம். அட்லீ இயக்கிய இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்தார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மூன்று நாட்களில் ரூ. 375 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது. திருமணத்திற்கு பின் நயன்தாராவிற்கு பெரிதும் பட வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது.
ஏமாந்துபோன நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்புகள் குறைத்தால் அவர் பாலிவுட் திரையுலகை குறிவைத்தாராம். தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்த நயன்தாராவிற்கு பாலிவுட் திரையுலகில் ஒரு அறிமுக நடிகைகக்கு கிடைக்கும் மரியாதை தான் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஷாருக்கான் படப்பிடிப்பு வரும் வரை அனைவரும் காத்து இருப்பது போல் நயன்தாராவும் பல நாட்கள் காத்திருந்துள்ளாராம். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தபின் தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் ஷாருக்கான் நமக்கு வாய்ப்பு கொடுப்பார் என நயன்தாரா நம்பியுள்ளாராம். ஆனால், அப்படி எதுவேமே நடக்கவில்லை என்பது ஏமாற்றத்தில் இருக்கிறாராம் நயன்.