சாலையோரம் இருந்த மக்களுக்கு உதவி செய்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்- வைரலாகும் வீடியோ
நயன்தாரா-விக்னேஷ் சிவன்
ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன்பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து மக்களிடம் ரீச் ஆனார்.
அதன்பின் சிறிய இடைவேளைக்கு பிறகு ராஜா ராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் என மிகச்சிறந்த படங்களில் நடித்து அசத்தினார். கடைசியாக கனெக்ட் என்ற திரைப்படம் அவரது நடிப்பில் வெளியாகி இருந்தது.
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் திரைப்படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார். மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படத்திலும் நடித்திருந்தார்.

உதவி செய்த நடிகை
இயக்குனர் விக்னேஷ் சிவன் & நயன்தாரா இருவரும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவி செய்துள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு அவர்கள் மக்களுக்கு உதவி செய்ய அந்த வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் கியூட்டான நாயகி யார் தெரியுமா?- அட இவங்க தானா?