புதுமண தம்பதி நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் புதுமண ஜோடிகளாக வலம் வருகிறார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவருக்கும் கடந்த ஜுன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் படு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இதில் ரஜினி, ஷாருக்கான், கார்த்தி, மணிரத்னம், டிடி என பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். அவர்களது திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவனே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.
திருமணத்திற்கு அடுத்த நாள் இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய ஒரு சர்ச்சையில் சிக்கினார்கள், அதற்கு இப்போது மன்னிப்பும் கேட்டுவிட்டார்கள்.
இன்று சென்னையில் நயன்தாராவை முதன்முதலாக சந்தித்த ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை இருவரும் சந்தித்துள்ளார்கள்.
இருவரின் சொத்து மதிப்பு
இந்திய விமானப் படையில் பணியாற்றியவரின் மகளாக பிறந்து இப்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வருபவர் நடிகை நயன்தாரா.
ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெறும் இவரது சொத்து மதிப்பு ரூ. 71 கோடி வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது.
ரூ. 1 முதல் ரூ. 3 கோடி வரை படத்திற்கு சம்பளம் பெறும் விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
நடிகை நயன்தாராவின் திருமண புடவையில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா?

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
