KRK வெற்றியை தொடர்ந்து காதலி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் சென்ற இடம் !
நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் விசிட் செய்த இடம்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட மூன்று நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
வித்தியாசமான திரைப்படமான காத்து வாக்குல ரெண்டு காதல் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
மேலும் தற்போதுவரையில் இப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இப்படம் நல்ல ஹிட் அடித்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவுடன் ஷிரடிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
அந்த புகைப்படத்தை பதிவிட்டு விக்னேஷ் சிவன் கண்மணியுடன் சீரடி சாயி பாபாவை சந்தித்து விட்டு வருவதாக பதிவிட்டுள்ளார்.
AK 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாகும் 43 வயது நடிகை ! யார் தெரியுமா?