விஜய் உடன் அந்த பாட்டுக்கு ஆடியது ஏன்.. நயன்தாரா சொன்ன காரணம்
நயன்தாரா
நடிகை நயன்தாரா தற்போது நடித்து இருக்கும் கனெக்ட் படத்தின் ரிலீசுக்காக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதற்காக அவர் கொடுத்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கோடம்பாக்கம் ஏரியா.. பாட்டுக்கு ஆடியது ஏன்?
கெரியரின் ஆரம்பகட்டத்தில் இருந்த போது விஜய் உடன் கோடம்பாக்கம் எரியா, ரஜினி உடன் பல்லேலக்கா ஆகிய பாடல்களில் ஆடியது ஏன் என கேள்வி கேட்டதற்கு நயன்தாரா பதில் அளித்து இருக்கிறார்.
"அந்த நேரத்தில் நான் ஸ்பெஷல் பாடல்களில் ஆடுவது பற்றி பலரும் அட்வைஸ் கூறினார்கள். அப்படி செய்தால் அதன் பின் அந்த வாய்ப்புகள் மட்டும் தான் வரும் எனவும் கூறினார்கள். "
"ஆனால் ஸ்பெஷல் பாடலில் ஆடுவது ஸ்பெஷலான விஷயம், நான் ஸ்பெஷலாக இருப்பதால் தான் என்னை அழைக்கிறார்கள். அது எப்படி இருக்கும் என பார்க்கிறேன், இது learning process தான்" என நயன்தாரா கூறி இருக்கிறார்.
படையப்பா படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் வாங்கிய நட்சத்திரம்.. யார் தெரியுமா

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
