மீண்டும் களமிறங்கும் நடிகை நஸ்ரியா.. நவம்பரில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட்
நஸ்ரியா
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நஸ்ரியா. ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நடித்த முதல் படத்திலே தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.
அதை தொடர்ந்து, தமிழில் இவர் 'நய்யாண்டி', 'நேரம்', 'வாயை மூடி பேசவும்', 'திருமணம் எனும் நிக்கா' என சில படங்களில் மட்டும் தான் நடித்தார். இருப்பினும் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தவர்.
நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், சமீபத்திய வருடங்களாக ரீஎன்ட்ரி கொடுத்து பிஸியாக நடித்து வருகிறார்.
புது படம்
பசில் ஜோசப்புடன் இணைந்து புதிய மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார். சூக்ஷம தர்ஷினி" என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் வரும் நவம்பர் மாதம் 22 - ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நஸ்ரியாயுடன் தீபக் பரம்போல், சித்தார்த் பரதன், மெரின் பிலிப், அகில பார்கவன், பூஜா மோகன்ராஜ், கோட்டயம் ரமேஷ் என பலர் நடித்துள்ளனர்.
நஸ்ரியா நடிப்பில் சுமார் 4 ஆண்டுகள் கழித்து இந்த படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
