ட்ரோல்களால் கண்ணீர் விட்டு அழுத மனைவி: நீயா நானா சர்ச்சையில் சிக்கியது பற்றி பதில்
விஜய் டிவியின் நீயா நானா ஷோ பற்றி தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நெட்டிசன்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நீயா நானா
நீயா நானா ஷோவில் அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் ஒருபக்கம் மற்றும் அவர்களது கணவர்கள் இன்னொரு பக்கம் என விவாதம் நடந்தது. அப்போது ஒரு பெண் தனது கணவருக்கு படிப்பறிவு இல்லை என நக்கல் செய்து பேசினார். மேலும் அவர் குழந்தையின் progress ரிப்போர்ட் கொடுத்தால் கூட ஒரு மணி நேரம் பார்த்து கொண்டு ABCD என எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டிருப்பார் என அந்த பெண் கூறினார்.
அந்த நேரத்தில் தொகுப்பாளர் கோபிநாத் அந்த அப்பா சொன்ன விளக்கத்தை கேட்டு நெகிழ்ச்சியாகி அவருக்கு சிறந்த அப்பா என்கிற பட்டத்தையும் பரிசையும் கொடுக்கிறார்.
ட்ரோல்கள்.. அழுகை வந்துவிட்டது: மனைவி
நெட்டிசன்கள் அந்த மனைவியை கடுமையாக வறுத்தெடுத்தனர். எல்லோர் முன்னிலையில் கணவரை இப்படி அசிங்கப்படுத்துகிறார் என நெட்டிசன்கள் விமர்சித்தனர். விக்னேஷ் சிவன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் கூட பலரும் இது பற்றி பேசினார்கள்.
இது பற்றி அந்த கணவன் - மனைவி ஜோடி தற்போது பேட்டி அளித்திருக்கின்றனர்.
ட்ரோல்கள் பற்றி பேசும்போது "முதலில் ஆர்வத்துடன் என்ன கமெண்ட் வருகிறது என பார்த்தேன், ஆனால் அதிகம் நெகடிவ் கமெண்டுகள் வருவதை பார்த்து அழுகை வந்துவிட்டது" என அந்த பெண் பேட்டியில் கூறிஇருக்கிறார் .
"நாங்கள் அப்படியே தான் இருப்போம், இது ஷோ என்பதால் தான் உங்களுக்கு அப்படி தெரிகிறது" எனவும் அவர் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாதா! வேறு எப்போது ரிலீஸ் தெரியுமா? தேதியுடன் இதோ