10 படம் பிளாப் ஆனாலும் அவருக்கு 11வது படம் தராங்க.. கத்தி பட வில்லன் யாரை சொல்கிறார்?
விஜய்யின் கத்தி படம் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தேறியவேண்டியது இல்லை. அந்த படத்தில் வில்லனாக நடித்து இருந்தவர் நீல் நிதின் முகேஷ்.
கார்ப்பரேட் வில்லனாக அவர் மிரட்டலான நடிப்பை கொடுத்து இருப்பார். அந்த படத்திற்கு பிறகு அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
ஆதங்கம்
நடிகர் நீல் நிதின் முகேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா துறை இருக்கும் விதம் பற்றி ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.
"நானா பல பெரிய நடிகர்களை பார்த்திருக்கிறேன். தொடர்ந்து பிளாப் படங்கள் கொடுத்தாலும் அவர்களுக்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கும்."
"அவர் 10 படம் பிளாப் கொடுத்தாலும் 11வதாக 100 கோடி படம் கிடைக்கும். ஆனால் என்னை போன்ற நடிகர்களுக்கு ஒன்றிரண்டு படங்கள் சரியாக போகவில்லை என்றால் உடனே 'உன் கேரியர் முடிந்துவிட்டது. வீட்டிலேயே இருக்க வேண்டியது தானே' என சொல்கிறார்கள். "
"உடனே உங்களை சினிமாவில் இருந்து தூக்கி எறிகிறார்கள். அதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது போல" என நீல் நிதின் முகேஷ் கூறி இருக்கிறார்.

