ஜெயிலர் 2 படத்திற்கு பின் மாஸ் கூட்டணியில் இணையும் நெல்சன்.. எதிர்பார்க்காத காம்போ
நெல்சன் திலீப்குமார்
இன்றைய தேதியில் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார். பீஸ்ட் படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து. இதனால் நெல்சன் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
அதனை ஜெயிலர் படத்தின் மூலம் தகர்த்தெறிந்து இன்று முன்னணி இயக்குனராக மாறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக ஜெயிலர் 2 உருவாகவுள்ளது.

இப்படத்திற்கான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும், ஜெயிலர் 2 உருவாகுவது என்பது உறுதி என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தான் நெல்சன் ஈடுபட்டுள்ளாராம்.
எதிர்பார்க்காத காம்போ
இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்திற்கு பின் இயக்குனர் நெல்சன் யாரை வைத்து இயக்க போகிறார் என்பது குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தெலுங்கு நடிகரான ஜூனியர் என் டி ஆர் உடன் கைகோர்க்கவுள்ளாராம் நெல்சன்.

ஏற்கனவே சில கதைகளை ஜூனியர் என் டி ஆர்-க்கு கூறியுள்ளாராம். மேலும் இந்த படத்தை தயாரிக்க இரண்டு தயாரிப்பு நிறுவனம் போட்டியிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri