நெல்சன் அடுத்த படத்தில் இந்த டாப் நடிகரா?.. குஷியில் ரசிகர்கள்
நெல்சன்
இன்றைய தேதியில் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் முக்கிய இயக்குநராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
இதனால் நெல்சன் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதனை ஜெயிலர் படத்தின் மூலம் தகர்த்தெறிந்து இன்று முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
அதுமட்டுமின்றி இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் தற்போது ஜெயிலர் 2 உருவாகி வருகிறது.

டாப் நடிகரா?
இந்நிலையில் ஜெயிலர் 2 படத்திற்கு பின் அடுத்து இயக்குநர் நெல்சன் யாரை வைத்து இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
அதன்படி, அடுத்து நெல்சன் தெலுங்கு நடிகரான ஜூனியர் என் டி ஆர் உடன் கைகோர்க்கவுள்ளார் என மறைமுகமாக ஜூனியர் என் டி ஆர் அவரது படத்தின் வெற்றி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

இப்படத்தை நாக வம்சி தயாரிக்கிறார். இந்நிலையில், வம்சி மற்றும் ஜூனியர் என் டி ஆர் கூட்டணியில் விரைவில் ஒரு படம் உருவாகும் என்றும், அது குறித்து விரைவில் வம்சி பேசுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu