ரஜினியால் பயந்து பயந்து படம் எடுத்த நெல்சன்.. இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் குறித்து பேசிய இயக்குனர்
ஜெயிலர்
2023ல் தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த திரைப்படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வித்தியசாமான கதாபாத்திரத்தில் இயக்கி, மாபெரும் வெற்றியை கொடுத்தார் இயக்குனர் நெல்சன்.
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயிலர் படம் குறித்து மனம் திறந்து ஒரு விஷயத்தை பற்றி பேசியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.
பயந்து படம் எடுத்த நெல்சன்
இதில் "ரஜினிகாந்த் சாரின் மாஸ் எனக்கு பிடிக்கும். அவருடைய ஸ்டைல் மற்றும் வசனங்களை பிரதானப்படுத்தி சண்டை காட்சிகளை குறைத்து படமாக்க வேண்டும் என விரும்பினேன். அவர் வயதுக்கு ஏற்றார் போல் படமாக்க வேண்டும் என எண்ணினேன். அதனால் தான் அவருடைய தலை முடி கூட டை அடிக்கவில்லை. இதையெல்லாம் நான் செய்தபோது, என்னுடன் இருந்தவர்கள் என்னை பயமுறுத்தினார்கள்".

"ரஜினிகாந்த் ஒரு மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோ அவர் இடைவேளை காட்சியில் சண்டை செய்யாமல் இருப்பது எப்படி? என என்னிடம் கேள்வி எழுப்பி பயமுறுத்தினார்கள். இதெல்லாம் மக்களுக்கு பிடிக்குமா என்ற சந்தேகத்துடன் தான் படம் எடுத்தேன். படம் வெளியாகும் வரை சந்தேகத்துடன் தான் இருந்தேன். ஆனால், எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. படம் வெளிவந்தது, மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. நான் தப்பித்துவிட்டேன்" என பேசினார்.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri