ரஜினியின் புதிய பட போஸ்டரில் இப்படியோரு அலட்சியமா! வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்...
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவரின் 169-வது திரைப்படமாக உருவாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தில் கன்னட திரையுலகின் பிரபல நடிகரான சிவராஜ்குமார் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே இப்படத்தின் புதிய போஸ்டருடன் ஜெயிலர் என்ற டைட்டிலை அறிவித்து இருந்தனர். சூப்பர் ஸ்டார் படத்தின் அறிவிப்பு இவ்வளவு சிம்பிளாக வெளியாவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.

தொடரும் ட்ரோல்ஸ்
இதற்கிடையே தற்போது அந்த போஸ்டரின் பின்னணி குறித்த தகவலை தான் இணையத்தில் நெட்டிசன்ஸ் பரப்பி வருகின்றனர். அதன்படி போஸ்டர் பின்னணிக்கு பயன்படுத்தியுள்ள புகைப்படம் இணையத்தில் இருந்தது என்றும் போட்டோ ஷூட் கூட இல்லாமல் இவ்வளவு அலட்சியம் ஏன் என்றும் கேட்டு வருகின்றனர்.
மேலும் ரஜினியின் ரசிகர்கள் அந்த புகைப்படங்கள் இது போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்த தான் இருக்கிறது, இன்னும் ஷூட்டிங் கூட தொடங்காத படத்திற்கு இப்படி தான் செய்ய முடியும் என கூறிவருகிறார்கள்.

விக்ரம் படத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக ஷேர் கொடுத்த திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?