ஆல்யா மானசாவின் பாரிஜாதம் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்... யார் தெரியுமா?
ஆல்யா மானசா
ஆல்யா மானசா, தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை.
விஜய் டிவியில் ராஜா ராணி என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் ராஜா ராணி 2 தொடரிலும் நடித்தார். அடுத்து சன் டிவி பக்கம் வந்தவர் இனியா என்ற சீரியலில் நடித்தார், தொடரும் முடிவுக்கு வந்துவிட்டது.
அதன்பின் ஆல்யா மானசா எந்த தொடர் நடிப்பார் என ரசிகர்கள் நிறைய கேள்வி கேட்டு வந்தனர்.

ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் பிக்பாஸ் 9வது சீசன் எப்போது ஆரம்பம்... இந்த CWC போட்டியாளர் உள்ளாரா?
புதிய என்ட்ரி
கடந்த மே மாதம் ஆல்யா மானசா தான் ஜீ தமிழில் புதிய தொடரில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறியிருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஆல்யா மானசா ஜீ தமிழில் நடிக்கும் பாரிஜாதம் தொடரின் புரொமோ வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தொடரில் புதியதாக இணைந்துள்ள நடிகர் பற்றிய தகவல் வந்துள்ளது.
பாரிஜாதம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் நிதின்க்ரிஷ் கமிட்டாகியுள்ளாராம்.