விஜய்யின் 68வது படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகை- அஜித் படத்தில் நடித்தவர் தான்

Yathrika
in திரைப்படம்Report this article
விஜய் 68
வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கியதில் இருந்து ரசிகர்கள் அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி எப்போது விஜய்யை வைத்து படம் இயக்குவீர்கள் என்று தான்.
அவரும் தளபதி ஒப்புக்கொண்டால் உடனே படம் இயக்கலாம் என எல்லா பேட்டிகளில் கூறியிருந்தார்.
அதற்கு ஏற்றார் போல் இப்போது விஜய்-வெங்கட் பிரபு கூட்டணி அமைந்து படப்பிடிப்புகளும் வேகமாக நடந்து வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் இசையமைப்பில் தயாராகும் இப்படத்தில் கணக்கிட முடியாத அளவிற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
பிரபல நடிகை
The Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, ஜெயராம் என ஏகப்பட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தற்போது படம் குறித்து வந்த அப்டேட் என்னவென்றால் இந்த படத்தில் புதியதாக பார்வதி நாயர் இணைந்துள்ளாராம்.
இவருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது, அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய படம் அமைந்துள்ளது என ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.