தொகுப்பாளினி மணிமேகலை வீட்டிற்கு என்ட்ரி கொடுத்த புதிய நபர்... யார் பாருங்க, போட்டோ
மணிமேகலை
ஒரு நிகழ்ச்சி கான்செப்ட் எவ்வளவு நன்றாக இருந்தாலும் சரி அதை கொண்டு செல்லும் தொகுப்பாளர் கையிலும் வெற்றிக்கான விஷயம் உள்ளது.
அவர் மக்களுடன் ஒன்றிணைந்து நிகழ்ச்சியை கொண்டு சென்றால் தான் ஷோ ஹிட்டடிக்கும். அப்படி தமிழ் சின்னத்திரையில் எவ்வளவு பெரிய நிகழ்ச்சி கொடுத்தாலும் சூப்பராக நடத்திக் கொடுக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் மணிமேகலை.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது தொகுப்பாளினி பயணத்தை தொடங்கியவர் விஜய், ஜீ தமிழ் நிகழ்ச்சிகளில் கலக்கி வருகிறார்.
அதோடு பிரம்மாண்டமாக நடக்கும் படங்களின் நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சிகளையும் மணிமேகலை சூப்பராக நடத்தி வருகிறார்.
புதிய என்ட்ரி
தொகுப்பாளினி பயணத்தை தொடர்ந்து தனது இன்ஸ்டா, யூடியூப் போன்ற பக்கங்களிலும் மிகவும் ஆக்டீவாக போட்டோ, வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
சமீபத்தில் அவரது வீட்டிற்கு புதிய நபர் என்ட்ரி கொடுத்துள்ளார், அது வேறுயாரும் இல்லை மணிமேகலை புதியதாக ஒரு கிளி வாங்கியுள்ளார். அதற்கு Mr. Mango என பெயர் வைத்துள்ளனர், இதோ போட்டோஸ்,