சீரியல்களாக களமிறக்கும் ஜீ தமிழில் இன்னொரு புதிய தொடர்.. இவர் தான் நாயகியா?
ஜீ தமிழ்
சீரியல் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக சன், விஜய், ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சீரியல்களின் ராஜா சன் தொலைக்காட்சி என்றாலும் விஜய் மற்றும் ஜீ தமிழிலும் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிறது.
புதிய சீரியல்
கெட்டி மேளம் போன்ற தொடர்கள் புதியதாக தொடங்கப்பட்டு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகர்கள் ஆனந்த் செல்வன் மற்றும் தேஜஸ்வினி இருவரும் ஜோடியாக நடிக்க புதிய சீரியல் வரப்போகிறதாம்.
ஜீ தெலுங்கு டிவியில் ஒளிபரப்பான Jagadhatri என்ற தொடரின் தமிழ் ரீமேக் தான் இந்த தொடராம்.
யாரடி நீ மோகினி, சந்தியா ராகம், நினைத்தாலே இனிக்கும் போன்ற தொடர்களை தயாரிக்க Monk Studios தான் இந்த புதிய சீரியலை தயாரிக்கிறார்களாம்.