விஜய் மகனின் முதல் படம் ஆரம்பிக்க தாமதமாவதே சஞ்சயால் தானா?- இப்படியொரு விஷயமா?
விஜய்யின் மகன்
விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் டாப் நாயகன், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் உதவியுடன் சினிமா பயணம் தொடங்கியது.
ஆரம்பத்தில் தனது தந்தை இயக்கத்திலேயே நடித்து வந்தவர் அதன்பிறகு நிறைய முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வந்தார்.
இப்போது அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் என இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்.
தற்போது விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார், படத்திற்கான படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது.
நடிகரின் மகன்
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகாமல் இயக்குனராக களமிறங்க இருக்கிறார். அவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறார்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி இருந்தது.
பின் அப்படம் குறித்து வேறுஎந்த தகவலும் வரவில்லை, தற்போது அது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு தமிழில் எழுத, படிக்க தெரியாதாம். இதனால் அவர் ஆங்கிலத்தில் எழுத அதை ஒருவர் தமிழில் மாற்றி வருகிறாராம், இதனால் படம் ஆரம்பம் ஆக தாமதமாவதாக கூறுகின்றனர்.
We are beyond excited ? & proud ? to introduce #JasonSanjay in his Directorial Debut ? We wish him a career filled with success & contentment ? carrying forward the legacy! ?#LycaProductionsNext #JasonSanjayDirectorialDebut @SureshChandraa @DoneChannel1 @gkmtamilkumaran… pic.twitter.com/wkqGRMgriN
— Lyca Productions (@LycaProductions) August 28, 2023