16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவிக்கு பதிலாக நடிக்கவிருந்த பிரபல நடிகை.. யார் தெரியுமா?
16 வயதினிலே
தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் பாரதிராஜா. தற்போது இவர் சில படங்களில் நடித்து வருகின்றார்.
கடந்த 1977 -ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே மூலம் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவை புரட்டி போட்டது.
இப்படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி எனப் பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ரஜினி பரட்டை என்ற கதாபாத்திரத்திலும், கமல் சப்பாணி என்ற வேடத்திலும், ஸ்ரீதேவி மயில் என்ற வேடத்தில் நடித்திருந்தார்கள். அந்த கதாபாத்திரங்கள் 3 பேருக்குமே சினிமா பயணத்தில் நல்ல ரீச் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
யார் தெரியுமா?
இந்நிலையில் ஸ்ரீதேவி நடித்திருந்த மயில் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தது நடிகை நிரோஷா தானாம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நிரோஷா இது தொடர்பாக பேசி இருக்கிறார்.