இளம் வயதிலேயே அந்த மாறி காட்சிகளில் நடிக்க இது தான் காரணம்..மனம் திறந்த பிரபல நடிகை
80 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நித்யா ரவீந்திரன். இவர் 'குருதி காலம்' என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
இவர் தமிழில் குடும்பம் ஒரு கதம்பம், சாவித்திரி, உயர்ந்த உள்ளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சீரியல்களில் முக்கியமான ரோல்களில் நடித்து வருகிறார்.
கிளாமர் காட்சி
நித்யா நடிப்பில் 1980 -ம் ஆண்டு 'லாரி' என்ற திரைப்படம் வெளியானது. இதில் இவர் சில குறிப்பிட்ட காட்சியில் படும் கிளாமராக நடித்திருந்தார்.
பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய நித்யா, " என் அப்பாவிற்கு நான் நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்".
"லாரி என்ற படத்தில் பல கிளாமர் காட்சிகள் இருக்கும் இருப்பினும் அந்த நேரத்தில் அது எனக்கு தவறாக தெரியவில்லை".
"மேலும் அந்த காலகட்டத்தில் படக்குழுவினர், படத்தில் காட்சி இது போன்று தான் இருக்க போகிறது. இப்படி தான் நடிக்க வேண்டும் என்றெல்லம் முன்கூட்டியே சொல்ல மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த பிக்பாஸ் புகழ் தாமரையின் புதிய வீடு- அவரே வெளியிட்ட வீடியோ