50 கோடியில் வீடு வாங்கி கொடுத்தாரா உதயநிதி!! விளக்கம் கொடுத்த நிவேதா பெத்துராஜ்..
நிவேதா பெத்துராஜ்
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு ஷங்கர், உதயநிதி ரூபாய் 50 கோடி பொருட் செலவில் துபாயில் வீடு வாங்கி கொடுத்து இருக்கிறார் என்றும் உதயநிதி மீது நிவேதா பெத்துராஜ்க்கு Possessive இருக்கிறது என்று பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பு கிளப்பி வருகிறது.
விளக்கம்
இந்நிலையில் இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், எனக்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்யப்படுவதாக பொய்யான செய்திகள் அண்மையில் பரப்பப்படுகிறது. இந்த செய்திகளை பரப்பும் முன் யோசியுங்கள்.
நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். என்னை குறித்து இதுவரை பேசப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
கடந்த 2002 ஆண்டு முதல் நாங்கள் குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறோம். நான் இதை சட்டரீதியாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் பத்திரிகையில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கிறது, அவர்கள் என்னை இப்படி அவதூறு செய்ய மாட்டார்கள் என்று நான் இன்னும் நம்புகிறேன் என்று நிவேதா பெத்துராஜ் பதிவிட்டுள்ளார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
