தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் நஷ்டம் ! அஜித்தின் திரைப்படத்தை வாங்க தயங்கும் விநியோகஸ்தர்கள்
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், இவரின் துணிவு திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அதன்படி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு வெளியாகவுள்ளது. அத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் அஜித் துணிவு திரைப்பட ப்ரோமோஷனில் கலந்து கொள்வார்கள் என சொல்லப்பட்ட நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, அவர் கலந்து கொள்ள மாட்டார் என்பதை பதிவு ஒன்றின் முலம் தெரிவித்து இருந்தார்.

துணிவு
இந்நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படத்தை வெளிநாட்டில் வாங்க விநியோகஸ்தர்கள் தயங்குவதாக தகவல் பரவி வருகிறது.
விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் அப்படமும் வெளியாவதாலும், அஜித்தின் கடைசி இரண்டு திரைப்படங்கள் நஷ்டம் அடைந்ததாலும் அப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது.
மேலும் துணிவு திரைப்படத்திற்கு தற்போது விநியோகஸ்தர்கள் வாங்க முன்வந்துள்ள விலை ரூ. 18 கோடி என சொல்லப்படுகிறது. அது வாரிசு திரைப்படம் வாங்கப்பட்ட விலையில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்யின் அப்பாவா இது, ஆளே மாறிவிட்டாரே?- அடுத்த அஜித் போலவா?