ஜெய் பீம் படத்திற்கு விருது இல்லையா.. இதயம் நொறுங்கிவிட்டதாக கூறிய முன்னணி தெலுங்கு ஹீரோ
69வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. 2021ம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்டு ரிலீஸ் ஆன படங்களுக்கான விருதுகள் தான் அறிவிக்கப்பட்டது.
அதில் RRR, புஷ்பா ஆகிய படங்களுக்கு அதிக அளவு விருதுகள் கிடைத்ததால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடினார்கள். புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.
தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கும் முதல் நடிகர் அல்லு அர்ஜுன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தெலுங்கு சினிமா துறையினர் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.
ஜெய் பீம்க்கு விருது இல்லையா? நானி பதிவு
தமிழ் சினிமாவில் விருது பெறும் என எதிர்பார்க்கப்பட்ட பல படங்களுக்கு ஒரு விருது கூட தராதது தமிழ் சினிமாரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் நானி இன்ஸ்டாகிராமில் ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காதது பற்றி பதிவிட்டு இருக்கிறார். அவர் இதயம் உடைந்துவிட்டது போன்ற எமோஜியை பதிவிட்டு உள்ளார்.


பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
