விற்பனையாகாத துணிவு படம்.. இத்தனை ஏரியாவில் வாங்க யாருமே வரவில்லையா? ஷாக்கிங் தகவல்
துணிவு
அஜித் மற்றும் வினோத் இருவரும் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்திருக்கும் படம் துணிவு. போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரித்து இருக்கிறார். அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படம் 2023 பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படமும் ரிலீஸ் ஆகும் என்பதால் பெரிய அளவில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனை ஆகவில்லை
துணிவு தமிழ்நாடு ரிலீஸ் உரிமை மட்டுமே தற்போது விற்பனை ஆகி இருக்கிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் இதை வெளியிடுகிறது.
ஆனால் "கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்கள் ரிலீஸ் செய்ய enquiry கூட வரவில்லை, வெளிநாட்டு உரிமையை வாங்க யாருமே இதுவரை வரவில்லை" என ஒரு பிரபல பத்திரிகையாளர் தெரிவித்து இருக்கிறார்.
"சினிமா விளம்பரத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை அஜித் தான் சொல்ல வேண்டும். அப்போது தான் படம் பற்றிய சந்தேகங்கள் விநியோகஸ்தர்களுக்கு தீரும்" எனவும் கூறி அந்த பத்திரிகையாளர் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
சினிமாவில் நடிகையாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி- என்ன படம் தெரியுமா?