சினிமாவில் நடிகையாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி- என்ன படம் தெரியுமா?
செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி
இந்த பெயரை கேட்டதுமே ரசிகர்களுக்கு ஒரு ஜோடி நியாபகம் வருவார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிராமிய பாடல்களை மட்டுமே பாடுவோம் என்று கூறி அதில் சாதனையை செய்தார்கள்.
நிறைய கிராமிய பாடல்களை பாடி மக்களை கவர்ந்த செந்தில் டைட்டிலையும் வென்றார். அதன்பிறகு செந்தில்-ராஜலட்சுமி இருவரும் உள்ளூர்-வெளியூர் என எல்லா இடங்களுக்கும் சென்று கச்சேரி நடத்தி பிஸியாக இருக்கிறார்கள்.
சொந்தமாக ஒரு ஸ்டூடியோ, பெரிய பங்களா வீடு என கட்டியுள்ளனர். செந்தில் ஒரு படம் நடித்தார், அது படு தோல்வியில் முடிந்தது, ராஜலட்சுமி பாடகியாக புஷ்பா படத்தில் பாடிய வாயா சாமி என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
புதிய படம்
தற்போது ராஜலட்சுமி சினிமாவில் நாயகியாக கலக்க களமிறங்கியுள்ளார். கணபதி பாலமுருகன் என்பவர் இயக்கிய லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் ராஜலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம், ராதா ரவியும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
இது ஒரு வீரமான படம் என்று கூறுகின்றனர்.
காதலி பாவ்னி பிறந்தநாளில் ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்ட அமீர்- கியூட் ஜோடி

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
