விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

தீபாவளிக்கு அப்டேட் கிடையாதா
அந்த வகையில் தீபாவளி வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் வெளியாகும் என சொல்லப்பட்டது. மேலும் அப்பட இசையமைப்பாளர் தமனும் சுசகமாக தீபாவளிக்கு அப்டேட் வரவுள்ளது குறித்து பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் தரப்பில் இது குறித்து விசாரித்தால் தீபாவளிக்கு வாரிசு-ன் இந்த ஒரு அப்டேட்டும் இல்லை என சொன்னதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் வாரத்தில் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்