ஜெயிலர் 2-வில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி.. வெளிவந்த அறிவிப்பு

By Karthick Raja Sep 30, 2026 07:50 AM GMT
Report
Nora Fatehi Special Dance in Jailer 2 Movie: பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படத்தில் சிறப்பு நடனம் ஆடியுள்ளார். அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பாடல் எப்போது வெளியாகிறது என்பது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயிலர் 2

கடந்த 2023-ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான திரைப்படம் ஜெயிலர். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், 3 ஆண்டுகள் கழித்து வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி ஜெயிலர் 2 திரைக்கு வரவிருக்கிறது.

ஜெயிலர் 2-வில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி.. வெளிவந்த அறிவிப்பு | Nora Fatehi Special Dance In Jailer 2 Movie

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் டோரதி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் டோரதி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் இப்படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் 2-வில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி.. வெளிவந்த அறிவிப்பு | Nora Fatehi Special Dance In Jailer 2 Movie

பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதுவரை இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக நேற்று மாலை வெளிவந்த One Name பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலாகியுள்ளது.

நோரா ஃபதேஹி

ஜெயிலர் 2 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், 4-வது பாடலான 'பின்தாஸ்' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்த பாடலில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி நடனமாடியுள்ளார்.

ஜெயிலர் 2-வில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி.. வெளிவந்த அறிவிப்பு | Nora Fatehi Special Dance In Jailer 2 Movie

ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடிய 'காவாலா' பாடல் எந்த அளவிற்கு ஹிட்டானது, அதே அளவிற்கு நோரா ஃபதேஹி நடனமாடியுள்ள 'பின்தாஸ்' பாடலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US