ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் படம் ரோஜா இல்லையா? இந்த படம் தான்
ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் மிக முக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று அவர் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர்.
தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ படங்களில் தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.
முதல் படம்
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம் என எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அது இல்லையாம்.
அதற்கு முன்பே அமீரஜன் இயக்கிய 'வணக்கம் வாத்தியாரே' என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொடுத்து இருக்கிறாராம்.
அந்த படத்தின் தயாரிப்பாளர் தன்னிடம் பணம் இல்லை என கூறி, இளையராஜாவிடம் கீபோர்டு வாசித்து கொண்டிருந்த ரஹ்மானிடம் இசையமைத்து கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். அவரும் ஒரே நாளில் படத்திற்கு இசையமைத்து கொடுத்தாராம்.
கைவிட்ட கணவர்.. கைக்குழந்தையுடன் தனியாக ஷூட்டிங் செல்லும் சன் டிவி நடிகை