கணவருடன் முதல் முறையாக பொது இடத்திற்கு வந்த ஹன்சிகா! ஹனிமூன் பற்றி கேட்டதற்க்கு கொடுத்த ரியாக்ஷன்
நடிகை ஹன்சிகா திருமணம் ஒரு வாரம் மிகப்பெரிய கொண்டாட்டமாக நடைபெற்றது. பல கோடி செலவு செய்து ஜெய்ப்பூரில் இருக்கும் கோட்டையில் ஹன்சிகா - சோஹைல் கத்துரியா திருமணம் நேற்று மாலை நடந்து முடிந்தது.
ஹன்சிகாவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஹன்சிகாவின் பதிவு
இந்நிலையில் திருமண போட்டோக்களை பதிவிட்டு நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். "Now&forever ❤️ 4.12.2022" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
என்றும், என்றென்றும் இந்த பந்தம் தொடரும் என குறிப்பிட்டு திருமண தேதியை அவர் பதிவிட்டு உள்ளார்.
ஹனிமூன் இப்போ இல்லை?
மேலும் திருமண கொண்டாட்டம் நிறைவு பெற்று இருக்கும் சூழலில் ஹன்சிகாவுக்கு உடனே ஹனிமூன் செல்லும் திட்டம் எதுவும் இல்லையாம். சில வாரங்களுக்கு ஷூட்டிங் வேலைகள் இருப்பதால் அதில் தான் அவர் கவனம் செலுத்த இருக்கிறார். அதன் பிறகு தான் கணவருடன் ஹனிமூன் செல்வார் என தெரிகிறது.
திருமணம் முடிந்தபின்னும் தொடர்ந்து நடிப்பேன் என ஹன்சிகா கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹன்சிகா மற்றும் அவரது கணவர் முதல் முறையாக பொது இடத்திற்கு வந்திருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரல ஆகி வருகிறது.
அப்போது பத்ரிகையாளர்கள் ஹனிமூன் பற்றி கேட்க ஹன்சிகா வெட்கப்பட்டு சிரித்துவிட்டு சென்றிருக்கிறார்.





மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
