சிம்பு வேண்டுமென்றே புறக்கணிப்பா? கோபமான ரசிகர்களுக்கு பத்து தல இயக்குனர் விளக்கம்
சிம்பு
சிம்பு நடிப்பில் அடுத்து பத்து தல படம் தயாராகி வருகிறது. அந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்காக ப்ரோமோ பாடல் ஷூட்டிங் சமீபத்தில் நடந்தது.
அதில் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர், கெளதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருகிறார்கள். ஆனால் சிம்பு ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை.
வாரிசு பட ப்ரோமோ சாங்கில் நடித்த சிம்பு, தற்போது அவரது படத்தின் பாடலில் இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

இயக்குனர் விளக்கம்
சிம்பு புறக்கணிக்கப்பட்டதாக வந்த செய்தி பற்றி இயக்குனர் விளக்கம் அளித்து இருக்கிறார். சிம்பு பத்து தல ஷூட்டிங்கை கடந்த வருடம் டிசம்பரில் முடித்துவிட்டார். நேற்று ஷூட் செய்யப்பட்ட பாடல் கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர் அகியோருடையது. அதில் ரஹ்மானை சேர்த்திருந்தோம்.
"எங்கள் strategyபடி சிம்புவை ப்ரோமோஷன் வீடியோவில் கொண்டுவரவில்லை. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு ப்ரோமோஷன் பற்றி நன்றாகவே தெரியும்" என இயக்குனர் Obeli.N.Krishna தெரிவித்து இருக்கிறார்.
Dear all , just want to make it clear, our original idea itself not to bring @SilambarasanTR_ in our promo video as per our strategy so, don’t abuse his name for no reason our producer @kegvraja @StudioGreen2 has clear idea about promotion of #PathuThala We hate ,hate speech
— Obeli.N.Krishna (@nameis_krishna) February 21, 2023
@SilambarasanTR_ brother completed #PathuThala shoot in December itself what we shot yesterday is song between @Gautham_Karthik and @priya_Bshankar . In which we included @arrahman sir also as promo song . This is for particular media people , pl make note of it .
— Obeli.N.Krishna (@nameis_krishna) February 21, 2023
இதுல என்ன பிற்போக்குத்தனம்?, என்கிட்ட ஆதாரம் இருக்கு.. மோகன்.G பேட்டி