பிரபல வில்லன் நடிகர் தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் சினிமா துறையினர்
சமீப காலமாக சினிமா துறையில் பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. தற்போது 58 வயதான ஒடியா மொழி நடிகர் ராய்மோகன் பரிடா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அவர் உடலை தூக்கில் தொங்கிய நிலையில் காலையில் குடும்பத்தினர் பார்த்திருக்கின்றனர். அதன் பின் போலீசார் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி இருக்கின்றனர்.

நடிகரின் இந்த முடிவால் அதிர்ச்சியான சினிமா துறையினர் பலரும் அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.
ராய்மோகன் பரிடா நூற்றுக்கும் மேற்பட்ட ஒடியா மொழி படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார். மேலும் 15 பெங்காலி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
அவர் இப்படி ஒரு முடிவெடுப்பார் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என சினிமா துறை பிரபலங்கள் பலரும் தெரிவித்து இருக்கிறார்கள்.
