இலங்கை பிரபலம் நடிகை மதுமிளாவை நியாபகம் இருக்கா?- அவரின் குழந்தையை பார்த்துள்ளீர்களா?
மதுமிளா
விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களை கவரும் வண்ணம் நிறைய தொடர்கள் ஒளிபரப்பானது, அதில் ஒன்று தான் ஆபிஸ். இந்த தொடருக்கு மக்களிடையே நல்ல ரீச் இருந்தது.
தாயுமானவன், அக்னி பறவை போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் நுழைந்து பின் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.
பின் விஷால் நடித்த பூஜை படத்தில் அவரின் தங்கையாக நடித்த மது ரோமியோ ஜுலியட், மாப்பிள்ளை சிங்கம் போன்ற படங்களில் தோன்றினார்.

குடும்பம்
படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். அண்மையில் தான் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது, முன்பை விட எடை கூடியுள்ள மதுமிதா தனது மகளுடன் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
கயல் சீரியலில் இருந்து நடிகர் சஞ்சீவ் வெளியேறுகிறாரா?- அவரது இன்ஸ்டா பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    