பவன் கல்யாணின் OG படத்தில் அவருக்கு மகளாக நடித்த சிறுமி.. யார் தெரியுமா?
OG
பவன் கல்யாண் நடிப்பில் கடந்த 25ஆம் தேதி திரைக்கு வந்த படம் OG. இப்படத்தை சுஜித் இயக்க DVV நிறுவனம் தயாரித்திருந்தது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.
முதல் முறையாக பவன் கல்யாணுடன் இணைந்து பிரியங்கா மோகன் ஜோடியாக நடித்திருந்தார். மேலும், இவர்களுடன் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்திருந்தனர்.
யார் தெரியுமா?
இந்நிலையில், பவன் மற்றும் பிரியங்காவின் மகளாக இப்படத்தில் நடித்த சாயிஷா யார் என்று உங்களுக்கு தெரியுமா?.
இந்த சிறு குழந்தை மும்பையைச் சேர்ந்தவர். இதுவரை பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்தி படமான லாக்அவுட்டில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது OG படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.