36 வருடங்களுக்கு முன் வெளியான விக்ரம் படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் எவ்வளவு தெரியுமா?
விக்ரம் படத்தின் பிரமாண்ட வசூல்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள விக்ரம் திரைப்படத்தை பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது, ஏற்கனவே விக்ரம் ட்ரைலர் வெளியாகி வெறித்தனமான வரவேற்பை பெற்றுள்ளது.
செம ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே எந்தளவிற்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் விக்ரம் 2022, கடந்த 1986-ல் வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சி இல்லை என்றாலும், அதில் வந்த கதாபாத்திரத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போதே பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விக்ரம் பெரிய வெற்றியடைந்தது. மேலும் பழைய விக்ரம் திரைப்படம் ரூ.1 கோடி பட்ஜெட்டில் உருவானதாம், ஆனால் அப்படம் ரூ.8 கோடிளவில் வசூலித்ததாகவும் சொல்லப்படுகிறது.