Oppenheimer திரை விமர்சனம்
உலகம் முழுவதும் இயக்குனர்களுக்கு என ரசிகர்கள் கூட்டம் இருக்கதான் செய்கிறது. அந்த வகையில் நோலன் ரசிகர்கள் கூட்டத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவரின் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது Oppenheimer எப்படியுள்ளது பார்ப்போம்.
கதைக்களம்
Oppenheimer ரஷ்ய கம்னியூஸ்ட்களுக்கு உதவினாரா சொந்த நாட்டிற்கு துரோகம் செய்தாரா என்ற விசாரணையில் படம் தொடங்க்ய்கிறது.
அதிலிருந்து Oppenheimer இங்கிலாந்து, ஜெர்மனியில் படிக்க தொடங்கியது முதல் அவருடைய வாழ்க்கை பயணம் தொடங்க, ஒரு நாள் தன் சொந்த ஊருக்கு திரும்ப 'புராஜெக்ட் மன்ஹாட்டான்' என்ற திட்டத்துக்குள் கொண்டு வரப்படுகிறார்.
அங்கு அவர் செய்யும் விஷயங்கள் அவரை மிகப்பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்க, அதன் பின் என்ன ஆனது, அந்த விசாரணையிலிருந்து வெளிவந்தாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
Oppenheimer படத்தை நோலன் எடுக்கப்போகிறார் என்றதுமே அவருடைய ரசிகர்கள் குஷி ஆனாலும், உலகின் பல இடங்களில் எதிர்ப்பு குரல் தான் பதிவானது. அமெரிக்கா, ஹீரோஷீமா, நாகசாகியில் தான் வீசிய அணுகுண்டை நியாயப்படுத்தி கொண்டாடப்போகிறது என்று நினைத்தார்கள்.
ஆனால், நோலன் படத்தில் காட்டியதே வேறு, இதை ஏண்டா செய்தோம் என்று Oppenheimer கலங்கும் வன்னம் பல காட்சிகளை வைத்துள்ளார்.
அதிலும் அமெரிக்கா குடியரசு தலைவரிடம் Oppenheimer தன் கைகள் இரத்தம் ஆகிவிட்டது என்று சொல்லும் இடத்தில், அவர் கர்சிப்-யை எடுத்து கொடுப்பது போல் வரும் நக்கல் காட்சிகள் அமெரிக்கர்களையே நோலன் ஒரு நொடி கண்ணத்தில் அறைவது போல் காட்டியுள்ளார்.
Oppenheimer ஆக Cillian Murphy மனுஷ் நடிக்கவில்லை, வாழ்ந்துள்ளார். கண்டிப்பாக அடுத்த வருட ஆஸ்கர் பட்டியலில் பெயர் உண்டு. அதிலும் அணுகுண்டு வீசிய பிறகு அவர் குற்ற உணர்ச்சியால் கலங்கும் இடம், நான் அணுவை இசையாக உணர்கிறேன் என்று அணுகுண்டு வெடிப்பதை இசை போல் நினைக்கும் காட்சி என அசத்தியுள்ளார்.
அதே போல் நம்ம Iron Man ராபர் டௌனி அட இவர் தானா இது என்று சில நோடி யோசிக்கும் அளவிற்கு வயதான கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.
படத்தின் பெரும்பகுதி உரையாடல் தான், நோலன் படம் என்றாலே விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது, ஆனால், இப்படத்தில் முழுவதுமே ஒரு உரையாடலாக தான் செல்கிறது.
கண்டிப்பாக ஆக்ஷன், அதிரடி, பேண்டஸி ஏன் விறுவிறுப்பான நோலன் படம் தான் வேண்டும் என்பவர்களுக்கு கூட இந்த படம் பிடிக்குமா என்றால் கேள்விக்குறி தான்.
படம் கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படமாகவே நகர்கிறது, அதனால் பொறுமை இருந்தால் மட்டுமே நீங்கள் செல்லலாம்.
படத்தின் மிகப்பெரும் சுவாரஸ்ய காட்சி ஆல்பட் ஐன்ஸ்டினை Oppenheimer சந்திக்கும் இடம் தான், அதிலும் அவரிம் Oppenheimer என்ன பேசினார் என்பதை கிளைமேக்ஸில் காட்டும் இடம் நோலன் என்ன சொல்ல வந்துள்ளார் என்பது படத்தில் மிக தெளிவாக புரிந்து விடும்.
க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம்.
நடிகர்களின் பங்களிப்பு.
டெக்னிக்கல் விஷயங்கள்
பல்ப்ஸ்
ஆவணப்படம் என்பதால் எல்லோருக்கும் கண்டிப்பாக இந்த படம் பிடிக்க வாய்ப்பில்லை
மொத்தத்தில் Oppenheimer உலகின் கருப்பு நாள் ஒன்றை தன் பாணியில் நோலன் சொல்லியிருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும், தற்போது உலக சினிமா ரசிகர்கள் மட்டுமே கொண்டாடலாம்.
கொலை திரைவிமர்சனம்