அம்மனை அவமதிக்கிறாரா நடிகை டாப்ஸி?.. எகிறும் கண்டனம்
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 -ம் ஆண்டு வெளியான "ஆடுகளம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.
இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். டாப்ஸி அதிகமாக பாலிவுட் படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

எகிறும் கண்டனம்
மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் டாப்ஸி சமீபத்தில் ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் கவர்ச்சியான உடையில் அம்மன் உருவம் பொறித்த நெக்லசை அணிந்துள்ளார்.
இந்நிலையில் "அம்மன் உருவம் பொறித்த நெக்லசை இந்த மாதிரியான கவர்ச்சி உடையில் இருக்கும் போது எப்படி அணியலாம்?" என்று சோசியல் மீடியா பக்கத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் பக்கம் ஹேக்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri