பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு கவுரவ டாகடர் பட்டம்.. தனது கரங்களால் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்
பாடகி பி.சுசீலா
1953ல் தனது இசை பயணத்தை துவங்கினார் பின்னணி பாடகி பி.சுசீலா. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 40,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார்.
ஐந்து முறை தேசிய விருது, மூன்று முறை தமிழக அரசு விருது, பத்ம விபூஷன் விருது வாங்கியுள்ளார். இதுமட்டுமின்றி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா பிரம்மாண்டமாக நடந்தது.
சிறப்பு விருந்தினராக வந்து பாதியில் கிளம்புவதாக ஷாக் கொடுத்த சுசீலா அம்மா, சரிகம சீசன் 3-ல் நடந்தது என்ன?
கவுரவ டாகடர் பட்டம்
கலைவாணர் அரங்கத்தில் நடந்த இந்த விழாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டம் வழங்கி வந்த முதல்வர் ஸ்டாலின், பாடகி பி. சுசிலா அவர்களுக்கு கவுரவ டாகடர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.
இதுமட்டுமின்றி பி.சுசிலா பாடிய பாடலில் தனக்கு பிடித்த பாடல் இதுதான் என்று 'நீ இல்லாத உலகத்திலே' எனும் பாடலை முதல்வர் ஸ்டாலின் பாடிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
88 வயதாகும் பாடகி பி.சுசீலா அவர்களுக்கு கவுரவ டாகடர் பட்டம் கிடைத்ததை தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.