தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம்!! பா ரஞ்சித் கண்டனம்..

By Dhiviyarajan Jun 20, 2024 12:50 PM GMT
Report

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததில் 35 பேர் பலியாகி உள்ளனர். இதில் 70 மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம்!! பா ரஞ்சித் கண்டனம்.. | Pa Ranjith Slammed Tamil Nadu Government

இந்நிலையில் பிரபல இயக்குனர் பா . ரஞ்சித், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்!

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்! @CMOTamilnadu என்று பா ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US