Dude பட இயக்குநர் நல்லா வெச்சு செஞ்சிட்டாரு.. பைசன் வெற்றி விழாவில் பா. ரஞ்சித் பேச்சு
பைசன்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வெளிவந்த பைசன் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிபெற்றுள்ளது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று பைசன் வெற்றிவிழா நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு, தங்களது நன்றிகளையும் மற்றும் பல விஷயங்களையும் பேசினார்கள்.
பா. ரஞ்சித்
அப்போது படத்தின் தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான பா. ரஞ்சித் பேசும்போது, "பைசன் நல்ல படம் இல்லனு நினைச்சு, Dude படத்துக்கு போனாங்க. Dude இயக்குநர் வெச்சு செஞ்சிட்டாரு. ரொம்ப நல்ல விஷயம் பண்ணாரு. ரொம்ப சந்தோஷமா இருக்கு" என பா. ரஞ்சித் பேசினார்.

Dude படத்தில் ஆணைக்கொலைக்கு எதிராக குரல் எழுப்பியிருந்ததை குறிப்பிட்டு இப்படி பேசினார் இயக்குநர் பா. ரஞ்சித்.
'மணத்தி கணேசன்' அவர்களுடைய வாழ்க்கையை மையமாக வைத்துதான் பைசன் படம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக கபடி வீரரான தி ரியல் கிட்டான் 'மணத்தி கணேசன்' நம்முடைய சினிஉலகம் Youtube சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.