கில்லி சாதனையை முறியடித்த படையப்பா.. ரீ-ரிலீஸ் முன் பதிவு வசூல்..

By Kathick Dec 11, 2025 11:00 AM GMT
Report

படையப்பா ரீ-ரிலீஸ்

விஜய்யின் கில்லி திரைப்படம் கடந்த ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படம் ரீ-ரிலீஸில் படைத்த வசூல் சாதனையை வேறு எந்த படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கில்லி சாதனையை முறியடித்த படையப்பா.. ரீ-ரிலீஸ் முன் பதிவு வசூல்.. | Padayappa Beats Ghilli Re Release In Rohini

இந்த நிலையில், நாளை ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு படையப்பா படம் ரீ-ரிலீஸாகவுள்ளது. இதுவரை நடந்த முன் பதிவில் மட்டுமே ரூ. 85+ லட்சம் வசூல் செய்துள்ளது. இது மிகப்பெரிய ஓப்பனிங்காக பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

சாதனை

சென்னையில் மிகவும் பிரபலமான திரையரங்கங்களில் ஒன்று ரோகிணி. உச்ச நட்சத்திரங்களின் வசூல் கோட்டை என்று கூறுவார்கள். நாளை ரீ-ரிலீஸாகவுள்ள படையப்பா திரைப்படம் ரோகிணி திரையரங்கில் மட்டுமே சுமார் 15,000 டிக்கெட்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கில்லி சாதனையை முறியடித்த படையப்பா.. ரீ-ரிலீஸ் முன் பதிவு வசூல்.. | Padayappa Beats Ghilli Re Release In Rohini

இதன்மூலம் திரையரங்கில் இதற்கு முன் ரீ-ரிலீஸான கில்லி திரைப்படம் முதல் நாள் செய்த டிக்கெட் விற்பனை சாதனையை படையப்பா முறியடித்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US