மயில் சொன்ன பொய்களை அடுக்கிய சரவணன், கேட்டுவிட்டாரா கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி டாப்பில் இருக்கும் தொடர்களில் ஒன்று.
கதையில் குடும்பமாக இருக்கும் வேண்டும் என ஆசைப்பட்டு அதன்படி வாழ்ந்த பாண்டியன் வீட்டில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். முதலில் செந்தில் அரசு வேலை வந்ததும் தனது மனைவி மீனாவை தனிக் குடுத்தனம் அழைத்து சென்றுவிட்டார்.

அவரைத் தொடர்ந்து பழனிவேல் அவரது அண்ணன்கள் சூழ்ச்சியால் பாண்டியன் தெருவிலேயே புதிய கடை திறக்கிறார். இதனால் கோபமான பாண்டியன் அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுகிறார்.
அடுத்து மயில் பிரச்சனை வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புரொமோ
இன்று வெளியாகியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோவில் மயில் சரவணன் பேச முறுக்கினார் என பாண்டியனிடம் கூறுகிறார்.

இதனால் பாண்டியன், சரவணனை திட்ட அவர் வீட்டிற்கு வந்து மயில் கூறிய பொய்யை எல்லாம் கூறி திட்டுகிறார்.
அந்த நேரத்தில் கோமதி வருகிறார், சரவணன் பேசியதை கேட்டுவிடுகிறாரா அல்லது இல்லை என்பதை அடுத்த எபிசோடுகளில் காண்போம்.