மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
கடந்த வாரம் எபிசோடில் காந்திமதியின் திருமண கொண்டாட்டமும் கூடவே பிரச்சனைகளும் ஒளிபரப்பானது.
கரி விருந்து போட்டு தங்களது ஆத்தாவின் பிறந்தநாளை ஜாம் ஜாம் கொண்டாடுவோம் என முத்துவேல்-சக்திவேல் திமிராக பேச கடைசியில் பாண்டியன் ஏற்பாடு செய்த விருந்தை சாப்பிட்டுவிட்டு எல்லோரும் சென்றார்கள்.

புரொமோ
கடந்த வாரம் அப்படியே நிகழ்ச்சியோடு முடிய இந்த வாரத்திற்கான எபிசோட் புரொமோ வெளியாகியுள்ளது.
அதாவது செந்தில் மீனாவிற்கு போன் செய்து காய் எல்லாம் வாங்கிக்கொண்டு செல், சமையல் செய்துவிடு, நான் கொஞ்சம் தாமதமாக வீட்டிற்கு வருகிறேன் என்கிறார்.

கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட்
ஆனால் அப்போது பாண்டியன் வீட்டில் இருந்த மீனா, உங்களது மகன் என்னை இங்கேயே ஒருநாள் தங்கு என்று கூறிவிட்டதாக கூற மற்றவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். வீட்டிற்கு வந்த செந்தில் மீனாவை காணவில்லை என போன் செய்ய அவர் எடுக்கவில்லை.
பின் பாண்டியன் வீட்டிற்கு செம கோபமாக வரும் செந்தில் நான் அவளை இங்கே தங்கு என கூறவில்லை என்கிறார்.