பழனி நிச்சயதார்த்தத்தில் நடந்த அதிர்ச்சி.. சோகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தற்போது மொத்த குடும்பமும் சேர்ந்து பழனி நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்து இருகிறது.
ஆனால் அதை நடக்க விடமாட்டோம் என பாண்டியனிடம் பழனியின் அண்ணன்கள் சவால் விடுகின்றனர். பழனியின் சொந்த அண்ணன்களே இப்படி நினைக்கிறார்களே என பாண்டியன் அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறார்.
நின்றுபோன நிச்சயதார்த்தம்
இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மொத்த குடும்பமும் நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு சென்று காத்திருக்கின்றனர். பழனியின் அம்மா கூட அங்கே வந்துவிட்டார்.
ஆனால் பெண் வீட்டார் யாருமே வரவில்லை. நேரில் சென்று கேட்கும்போது 'மளிகை கடையில் பொட்டலம் மடிக்கும் ஆளுக்கு பெண் கொடுக்கமாட்டோம்' என கூறி விடுகிறார்கள்.
இதை கேட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அதிர்ச்சியில் இருக்கிறது. ப்ரோமோவில் நீங்களே பாருங்க.