ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
கடந்த சில வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
மயில் உண்மை தெரியவர பாண்டியன் குடும்பம் அவரை வெளியே அனுப்ப அதன்பிறகு தான் பெரிய பிரச்சனையே. பாண்டியன் குடும்பத்தோடு ஜெயிலுக்கு செல்ல பின் எப்படியோ மனம் மாறி கோமதி அண்ணன்கள் தனது தங்கை குடும்பத்தினரை காப்பாற்றினார்கள்.

மயில் பிரச்சனை அடுத்து எப்படி முடிவும் என தெரியவில்லை, விவாகரத்து ஆகிவிடுமோ என மயில் கதறியபடி உள்ளார்.
இன்றைய எபிசோட்
நேற்றைய எபிசோடில், பழனி சொன்ன பேச்சைக்கேட்டு ராஜி தனது அப்பா வீட்டிற்கு சென்றார். அவரை வீட்டில் இருக்கும் அனைவரும் சந்தோஷமாக வரவேற்றுள்ளனர். அவரது அப்பா சித்தப்பாவும் ராஜி வந்தது குறித்து எதுவும் சொல்லவில்லை.

வீட்டிற்கு வந்த ராஜி, கோமதியிடம் நீங்களும் உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்கிறார், ஆனால் அவரோ பயப்படுகிறார்.
இன்றைய எபிசோடில், ராஜி பேச்சைக் பேட்டு கோமதி தனது அம்மா வீட்டிற்கு பல வருடங்கள் கழித்து செல்கிறார். அவரைப் பார்த்ததும் அவரது அம்மா, அண்ணிகள் வரவேற்க சக்திவேல்-முத்துவேல் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள்.

ஆனால் திடீரெந சக்திவேல் ஏதோ பிரச்சனை அதனால் உதவினோம், அதற்காக சண்டை முடிந்துவிட்டது என்றில்லை, எப்போதும் உண்மை மன்னிக்க மாட்டோம் என வழக்கம் போல் பேசுகிறார்.
அவர் பேசியதை கேட்டு கோமதி அங்கேயே அழுதபடி இங்கே வந்தது தவறு தான், எனக்கு உதவியதற்கு நன்றி என கூறுகிறார்.