பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் அடுத்து வரும் மாற்றம்! முடியப்போகிறதா?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒருகாலத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வந்தது. ஆனால் கதையில் பரபரப்பு குறைந்ததால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரேட்டிங் அதிகம் குறைந்து வருகிறது.
மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் தற்போது ஒருவழியாக புது வீட்டை கட்டி முடித்து அதில் குடியேறிவிட்டனர். தனத்திற்கு கேன்சர் இருப்பதும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இனி கதை எந்த திசையில் நகரும் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
இரண்டாம் பாகம்?
இந்நிலையில் தற்போது ஒரு புது தகவல் பரவி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் பாகம் விரைவில் முடிவுக்கு வருகிறதாம்.
அடுத்து 2ம் பாகம் தொடங்க போகிறதாம். 5 வருடங்களுக்கு பிறகு என கதையில் மாற்றம் வர போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த மாற்றம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.