Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் பாகம் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் கதையாக ஒளிபரப்பாக இப்போது 2ம் பாகம் தந்தை-மகன்களின் உறவை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரம் கதிர் டிராவல்ஸ் திறந்த விஷயம் ஒளிபரப்பானது, பின் மீனா-செந்தில் Quarters விஷயம் கொஞ்சம் காட்டப்பட்டது. இன்றைய எபிசோடில், சரவணன்-மயிலிடம் அவரின் அப்பா செய்த செயலை வைத்து கோபமாக சண்டை போடுகிறார்.
இன்னொரு பக்கம் செந்தில் தனக்கு அரசு வேலை கிடைத்ததால் பாண்டியன் கடையை கிண்டல் பேசுகிறார்.
புரொமோ
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடருக்கான புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் செந்தில், நானும் மீனாவும் Quarters செல்ல இருக்கிறோம் என கூற கோமதி தனியாக போக இப்போது என்ன ஆனது என வருத்தமாக கூறுகிறார்.
பாண்டியனோ யாருக்கு என்ன விருப்பமோ அதையே செய்யட்டும் என்கிறார். பின் மீனா பாண்டியனை தனியாக சந்தித்து இதில் தனக்கு துளி கூட விருப்பம் இல்லை என தனது எண்ணத்தை கூறுகிறார். இதோ புரொமோ,