குடித்துவிட்டு புலம்பிய ஜீவா.. காருக்காக மோசமாக அசிங்கப்படுத்திய முல்லையின் அம்மா! பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று
ஜீவா புலம்பல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒன்றாக அண்ணன் தம்பிகள் இடையே தற்போது ஒரு புது பிரச்சனை வந்திருக்கிறது. ஜீவா குடித்துவிட்டு மாமனார் ஜனார்த்தனன் மற்றும் பிரஷாந்த் உடன் பேசும்போது தனது மனதில் இருக்கும் எல்லா குமுறல்களையும் கொட்டி விடுகிறார்.
"குழந்தைக்கு டயப்பர் வாங்க கூட என்னிடம் காசு இல்லை, கேட்டால் என் அண்ணன் 200 ருபாய் எடுத்து கொடுக்கிறார், அதற்க்கு 5 வாங்கி கொண்டு போனால் என் மனைவி 'இவ்ளோதானா' என கேட்கிறார். "
"நான் இதை எல்லாம் சமாளிக்க காரணம் மீனா மட்டும் தான். பெரிய வீட்டில் இருந்து வந்த பெண், அந்த வீட்டில் தரையில் படுத்து தூங்குகிறார். மற்றவர்கள் எல்லோரும் மெத்தையில் தூங்குகிறார்கள். நான் அவளுக்காக எதுவுமே செய்து கொடுக்கவில்லை" என கூறுகிறார் ஜீவா.
ஜீவா பேசுவதை எல்லாம் வீடியோ எடுத்து பிரஷாந்த் மீனாவுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். தன்னை பற்றி ஜீவா பேசியதை கேட்டு அவர் கொஞ்சம் மகிழ்ச்சி தான்அடைகிறார் . அதற்கு பின் வீட்டுக்கு குடிபோதையில் வரும் ஜீவாவை அவர் சமாளித்து தூங்க வைக்கிறார்.
முல்லை அம்மாவால் அவமானம்
அதன் பின் மறுநாள் மூர்த்தி ஜீவாவை கடைக்கு அழைக்கிறார். ஆனால் அவர் கல்யாண பத்திரிகை கொடுக்க வேண்டும் என சொல்லி மீனா உடன் செல்வதாக கூறுகிறார்.
அதற்கு காரை கொண்டு செல்லும்படி தனம் சாவி கொடுத்து அனுப்புகிறார். அதன் பின் ஜீவா காரை துடைத்து கொண்டிருக்கும்போது மீனாவின் அப்பா மற்றும் அம்மா இருவரும் வருகிறார்கள்.
'இது மாப்ள கார் தான. நீங்க பத்திரிகை வைக்க எடுத்துட்டு போனா நாங்க எப்படி போறது' என கேட்டு அசிங்கப்படுத்தி இருக்கிறார்.
இந்த காட்சிகள் நாளைய எபிசோடில் வர இருக்கிறது.
முதல் முறையாக இரட்டை குழந்தைகளுடன் விமான நிலையத்திற்கு வந்த நயன்தாரா.. வெளிவந்த வீடியோ