பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் ஜீவாவா இது?- புதிய லுக்கில், சீரியல் நடிகைகளுடன் அவர் எடுத்த போட்டோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் புத்தம் புதிய தொடர்கள் வர இருப்பதாக சமூக வலைதளங்களில் நிறைய தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதேசமயம் பழைய தொடர்கள் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது.
அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர இருப்பதாக எப்போதோ தகவல் வந்திருந்தது, அப்படி தான் கதையும் நகர்ந்து கொண்டிருக்கிறது.
பிரிந்து சென்ற கண்ணன் மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டான், அடுத்து ஜீவாவும் வந்துவிடுவார் போல் தெரிகிறது.
அண்ணன்-தம்பிகள் ஒன்றாக இணைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவையும் எட்டிவிடும்.
வெங்கட் புதிய போட்டோ
சீரியல் முடிவுக்கு வரும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஜீவா கிழக்கு வாசல் என்ற தொடரில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ராடான் நிறுவனம் தயாரிக்க தொடர் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதுவரை சீரியல் படப்பிடிப்பில் இருந்து எந்த புகைப்படமும் வெளிவராத நிலையில் வெங்கட் சீரியல் நாயகி ரேஷ்மாவுடன் எடுத்த போட்டோ வெளியாகியுள்ளது.
வெங்கட்டும் இந்த சீரியலில் புதிய லுக்கில் வருவார் என கூறப்படுகிறது.
விவகாரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்ட நடிகை அசின்.. வருத்தத்தில் ரசிகர்கள், ஆனால்