வெக்கமே இல்லாமல் இப்படியா பண்றது.. கோபமாக பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அண்ணன் மூர்த்தி வீட்டை விற்கும் விஷயத்தில் இறங்கி இருக்கிறார். அவர்கள் குடும்பத்தில் இருந்து தற்போது கதிர் மட்டுமே விலகி இருக்கிறார்.
அவரும் முல்லையும் சேர்ந்து ஒரு ஹோட்டல் தொடங்கி நடத்தி வருகிறார்கள். மளிகை கடை ஒருபுறம், இன்னொரு பக்கம் கதிர் நடத்தும் ஹோட்டல் என சீரியல் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
கதிர் பதிவிட்ட வீடியோ
கதிர் ரோலில் நடித்து வரும் நடிகர் குமரன் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அவர் ஹோட்டலுக்கு தம்பி கண்ணன் வந்து ஓசியில் சிக்கன் சாப்பிடும்போது எடுத்த வீடியோ தான் அது.
வெக்கமே இல்லாமல் அவன் 8 முழு சிக்கனையும் சாப்பிட்டுவிட்டதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். நீங்க யாரும் தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். சீரியலில் வந்த காட்சியை பற்றி தான் அவர் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார் போல.
பிரைவேட் ஜெட்ல ஹனிமூன் சென்ற ரவீந்தர் - மஹாலட்சுமி ! கூடவே அவர் அளித்த பகிர் விளக்கம்