இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு ரெண்டு பொண்டாட்டி.. வைரலாகும் வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கூட்டு குடும்பம் மூன்றாக உடைந்துவிட்டது. மீனாவின் தங்கை திருமணத்தில் நடந்த பிரச்சனை தான் அதற்கு காரணம்.
மொய் எழுதும்போது மூர்த்தி, கதிர், கண்ணன் என தனித்தனியாக பெயர் வந்ததால் தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக ஜீவா சண்டை போட்டு மாமியார் வீட்டிலேயே இனி இருக்கப்போவதாக கூறினார். அதன் பின் கண்ணன் - ஐஸ்வர்யாவும் சண்டை போட்டு சென்றுவிட்டனர்.
ஜீவாவுக்கு ரெண்டு பொண்டாட்டி..
சீரியல் மிக சீரியசாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் மீனா ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்திருக்கும் காரியம் வீடியோவாக வைரலாகி வருகிறது.
கல்யாண ஷூட்டிங் நடந்தபோது மாப்பிள்ளை கழுத்தில் அவர் தாலி கட்டி இருக்கிறார். அதன் பின் அதே தாலியை எடுத்து பெண் கழுத்திலும் கட்டி இருக்கிறார்.
தாலி கட்டிவிட்டு 'இனி ஜீவாவுக்கு ரெண்டு பொண்டாட்டி' என கூறி இருக்கிறார். வீடியோ இதோ
#PandianStores pic.twitter.com/riGlv5Xfqv
— Parthiban A (@ParthibanAPN) March 30, 2023
எனக்கு மரணம் கூட நேரிடலாம்.. சிறுத்தை சிவாவின் தம்பி உருக்கம்